குளிர்பான பாட்டிலில் பாலிதீன் பேப்பர் இருந்த வழக்கு : கொக்கோ-கோலா நிறுவனத்திற்கு அளித்த தீர்ப்பிற்கு வரவேற்பு

கோவை : குளிர்பான பாட்டிலில் பாலிதீன் பேப்பர் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், கொக்கோ-கோலா நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்ததுடன், அப்பகுதியில் உள்ள 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையான சத்தான பொருட்களை வழங்கவும் கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை : குளிர்பான பாட்டிலில் பாலிதீன் பேப்பர் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், கொக்கோ-கோலா நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்ததுடன், அப்பகுதியில் உள்ள 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையான சத்தான பொருட்களை வழங்கவும் கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவை சி.எம்.சி. காலனியைச் சேர்ந்த பூர்ணிமா (21) என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள மளிகைக் கடையில் 200 மில்லி கொள்ளளவு கொண்ட கொக்கோ-கோலா குளிர் பானத்தை ரூ. 12-க்கு வாங்கி உள்ளார். அவர் வாங்கிய குளிர் பாட்டிலில் பாலித்தீன் பேப்பர் இருந்ததை அடுத்து, மளிகை கடைக்கு சென்று இது குறித்த கேட்டுள்ளார். அப்போது, இது குறித்து கொக்கோ-கோலா நிறுவனத்திடம் போய் கேட்டு கொள்ளுங்கள் என கடைக்காரர் கூறியுள்ளார். இதனால், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் பூர்ணிமா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், தரமற்ற வகையில் குளிர்பானம் தயாரித்த கொக்கோ-கோலா நிறுவனத்திற்கு ரூ. 75,000 அபராதமும், தர பரிசோதனை செய்யாமல் விற்பனை செய்த மளிகை கடைக்காரரான ஜவகர் ராஜுக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், வழக்கு செலவிற்கு ரூ. 3,000 மற்றும் மனுதாரர் கோரிக்கைப்படி அபராதத் தொகையை அந்தப் பகுதியில் உள்ள 100 ஆதரவற்ற மற்றும் வசதி குறைவான குழந்தைகளுக்கு பழங்கள் மற்றும் சத்து பொருட்களாக ஒரு மாதம் வழங்க கொக்கோ-கோலா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...