திருப்பூரில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் கைது

திருப்பூர் : திருப்பூரில் காதலித்து திருமணம் செய்துகொண்ட காதல் மனைவியை குடும்பத்தகராறு காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் காதலித்து திருமணம் செய்துகொண்ட காதல் மனைவியை குடும்பத்தகராறு காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



திருப்பூர் டி.எம்.எஸ். நகர் அருகேயுள்ள அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (33). இவரது மனைவி பிரியா (31). இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவரும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பிரியா கணவரைப் பிரிந்து திருப்பூரில் தனது தாயாருடன் வசித்து வந்த நிலையில், ரமேஷ்குமாரும் தனது தாயாருடன் அருள்ஜோதி நகரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், இருவரும் கலந்து பேசி சேர்ந்து வாழ்க்கை நடத்துவது குறித்து முடிவு செய்யலாம் எனக் கூறி, பிரியாவை நேற்று மாலை தனது தாயார் வீட்டுக்கு ரமேஷ்குமார் அழைத்து வந்துள்ளார். தாயார் முன்னிலையில் சமரசப் பேச்சு நடைபெற்று வந்த போது, இருவருக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கோபத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து பிரியாவை ரமேஷ்குமார் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த பிரியா ரத்த வெள்ளத்தில் துடித்தார். இதையடுத்து, சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 



இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிரியாவை தங்களது வாகனத்தில் மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.



இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக வடக்கு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரமேஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...