தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை : கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை : கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு முதலமைச்சர்‌ எடப்பாடி கே. பழனிசாமியின் கடந்த ஆண்டு ஜுன் 05-ம் தேதி சட்டப்பேரவையில்‌ 110 விதியின்‌ கீழ்‌ ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ மீதான தடை வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல்‌ அமலுக்கு வரும்‌ என அறிவித்தார்‌. மேற்காண்ட‌ அறிவிப்பினைச்‌ செயல்படுத்த அரசாணை எண் 84, சுற்றுச்சூழல்‌ - வனத் ‌(சு.சூ.2) துறை நாள்‌ ஜுன் 25-ல்‌ ஆணைகள்‌ வெளியிடப்பட்டது. இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர்‌ பிளாஸ்டிக்‌ மாசு இல்லா தமிழ்நாடு 'என்ற ஒரு இலட்சினை, இணைய தளம்‌, கைபேசி செயலி மற்றும்‌ விழிப்புணர்வு பற்றிய குறும்படம்‌ ஆகியவற்றை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியிட்டார். 

இதைத் தொடர்ந்து, ‌தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ குறித்து பல கட்டங்களில்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர்‌ தலைமையில்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ கடந்த மே மாதம் 29-ம் தேதி நடத்தப்பட்டு உள்ளாட்சித்‌ துறை மற்றும்‌ உணவுப்‌ பாதுகாப்புத்‌ துறை அலுவலர்களை தொடர்‌ ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும்,‌ கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ தலைமையில்‌ பங்களிப்பாளர்கள்‌ கூட்டம்‌ கோவை மாநகராட்சி அலுவலகத்தில்‌ மே 13-ம் தேதி அன்று நடத்தப்பட்டு தடை ஆணையை மீறுபவர்கள்‌ மீது ௭டுக்கப்படும்‌ நடவடிக்கை பற்றிக் கூறப்பட்டது.

மேலும்,‌ ஆட்சியர்‌ அறிவுறுத்தலின்படி, தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ தயார்‌ செய்து வந்த நிறுவனங்கள்,‌ பொள்ளாச்சி வட்டத்தில்‌ பிளாஸ்டிக்‌ பூசப்பட்ட பேப்பர்‌ கப்‌ தயாரிக்கும்‌ நிறுவனங்கள்‌-2, பேரூர்‌ வட்டத்தில்‌ - நெய்யப்படாத பைகள்‌ மற்றும்‌ பிளாஸ்டிக்‌‌ பை தயாரிக்கும்‌ நிறுவனங்கள்‌-2, கோவை தெற்கு வட்டத்தில்‌ - நெய்யப்படாத பைகள்‌ தயாரிக்கும்‌ நிறுவனம்‌-1 ஆகிய நிறுவனங்கள்‌ ஆய்வு செய்யப்பட்டு மின்‌ இணைப்பு துண்டிப்பு மற்றும்‌ சீல்‌ வைக்கப்பட்டது. 

அதோடு,‌ மாவட்ட ஆட்சியர்‌ தடை ஆணையை மீறுபவர்கள்‌ மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்‌ என மாவட்ட ஆட்சியரால்‌ மீண்டும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...