கோவை : கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் கடந்த ஆண்டு ஜுன் 05-ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார். மேற்காண்ட அறிவிப்பினைச் செயல்படுத்த அரசாணை எண் 84, சுற்றுச்சூழல் - வனத் (சு.சூ.2) துறை நாள் ஜுன் 25-ல் ஆணைகள் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு 'என்ற ஒரு இலட்சினை, இணைய தளம், கைபேசி செயலி மற்றும் விழிப்புணர்வு பற்றிய குறும்படம் ஆகியவற்றை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பல கட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் கடந்த மே மாதம் 29-ம் தேதி நடத்தப்பட்டு உள்ளாட்சித் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களை தொடர் ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும், கோவை மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் பங்களிப்பாளர்கள் கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மே 13-ம் தேதி அன்று நடத்தப்பட்டு தடை ஆணையை மீறுபவர்கள் மீது ௭டுக்கப்படும் நடவடிக்கை பற்றிக் கூறப்பட்டது.
மேலும், ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்து வந்த நிறுவனங்கள், பொள்ளாச்சி வட்டத்தில் பிளாஸ்டிக் பூசப்பட்ட பேப்பர் கப் தயாரிக்கும் நிறுவனங்கள்-2, பேரூர் வட்டத்தில் - நெய்யப்படாத பைகள் மற்றும் பிளாஸ்டிக் பை தயாரிக்கும் நிறுவனங்கள்-2, கோவை தெற்கு வட்டத்தில் - நெய்யப்படாத பைகள் தயாரிக்கும் நிறுவனம்-1 ஆகிய நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் சீல் வைக்கப்பட்டது.
அதோடு, மாவட்ட ஆட்சியர் தடை ஆணையை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரால் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.