கோவை : ராஜவீதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 27 வகையான இரண்டு டன் எடையுள்ள பழங்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இந்த அலங்கார அம்மனை தரிசிக்க பொதுமக்கள் காலை முதல் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

கோவை ராஜவீதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 27 வகையான 2 டன் எடை கொண்ட பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த அலங்காரத்தில் ஜப்பான் தேசிய பழம் பர்ஸ்மான், மங்குஸ்தான் ஆப்பிள், மாதுளை, பேரீச்சை, திராட்சை, மாம்பழம், துரியன் உள்ளிட்ட 27 வகையான பழங்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்மனை தரிசிக்க பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், பேரூர் பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர். மேலும், இந்த அம்மனை வழிபட்டால் கல்வி, செல்வம் மேலோங்கும் என்பது ஐதீகம். வருடம் தோறும் ஆடி வெள்ளி அன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். குறிப்பாக, மாதுளம் பழங்களை கொண்டு அம்மனுக்கு கிரீடம் அமைத்துள்ளது பார்ப்போரை வியக்க வைக்கிறது.