கோவை : அகில இந்திய மகளிர் கூட்டமைப்பு மற்றும் சங்கரா ஐ பவுண்டேஷன் இணைந்து, ‘ஒளியாய் இரு’ என்ற சமுதாய கண் பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டியில் உள்ள சங்கரா கண் மருத்துவமனையில் அகில இந்திய மகளிர் கூட்டமைப்பின் சார்பில் அகில இந்திய அளவில் கண் பாதுகாப்பு திட்டமான ‘த்ரிஷ்யம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவரான நித்தி குப்தா, சங்கரா ஐ பவுண்டேஷன் பத்மஸ்ரீ டாக்டர் ஆர்.வி. ரமணியுடன் இணைந்து துவக்கி வைத்தார். துவக்க விழாவில், மகளிர் கூட்டமைப்பு கோவை கிளையின் தலைவர் சிவானி டால்மியா, முன்னாள் தலைவர் ரோகிணி கிறிஸ்டோபர் மற்றும் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனி பரத் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அகில இந்திய மகளிர் கூட்டமைப்பு தலைவர் நிதி குப்தா கூறுகையில், "பள்ளிகளுக்கு கட்டிடம், கழிப்பறைகள் கட்டிக் கொடுத்து கல்வி புகட்டுவதோடு மட்டுமின்றி, தற்போது பொன் விழாவை முன்னிட்டு, த்ரிஷ்யம் என்ற சமுதாய கண் பாதுகாப்பு திட்டத்தையும் துவக்கியுள்ளோம். நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கண் பாதுகாப்பு திட்டமாக இது செயல்படுத்தப்படும். தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, குஜராத், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சங்கரா கண் மருத்துவமனைகளுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்," என்றார்.