கோவை : கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜீத் பங்கேற்றார்.
கோவை : கோவையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜீத் பங்கேற்றார்.
கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கடந்த 28-ம் தேதி துவங்கிய மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் வரும் 2-ம் தேதி வரை நடக்கிறது. இதில், கோவை ரைபிள் கிளப், எஸ்.டி.ஏ.டி. ஷுட்டிங் அகாடமி, சென்னை ரைபிள் கிளப், மதுரை ரைபிள் கிளப் உள்ளிட்ட பல்வேறு கிளப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினரான நடிகர் அஜீத்குமார் நேற்று கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இதற்காக, காவலர் பயிற்சி மையம் வந்த அவரை அங்கிருந்தவர்கள் தங்களது அலைபேசி மூலம் படம் எடுத்தனர். காரில் வந்த அஜித் மைதானத்திற்கு காவலர்கள் அழைத்து சென்றனர். நடிகர் அஜீத் இன்று துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க வந்துள்ளார் என்பதை அறிந்து அங்கு சென்ற பத்திரிகையாளர் செய்தி சேகரிக்க சென்றனர். ஆனால், பாதுகாப்பு காரணங்கள் கருதி புகைப்படமோ, வீடியோ ஒளிப்பதிவோ வேண்டாம் என காவல் ஆணையர் உத்தரவிட்டதால், பத்திரிகையாளர் அனுமதிக்கப்படவில்லை.