கோவையில் நடக்கும் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 'தல' அஜித் பங்கேற்பு

கோவை : கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜீத் பங்கேற்றார்.


கோவை : கோவையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜீத் பங்கேற்றார்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கடந்த 28-ம் தேதி துவங்கிய மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் வரும் 2-ம் தேதி வரை நடக்கிறது. இதில், கோவை ரைபிள் கிளப், எஸ்.டி.ஏ.டி. ஷுட்டிங் அகாடமி, சென்னை ரைபிள் கிளப், மதுரை ரைபிள் கிளப் உள்ளிட்ட பல்வேறு கிளப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று உள்ளனர். 



இந்த நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினரான நடிகர் அஜீத்குமார் நேற்று கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 

இதற்காக, காவலர் பயிற்சி மையம் வந்த அவரை அங்கிருந்தவர்கள் தங்களது அலைபேசி மூலம் படம் எடுத்தனர். காரில் வந்த அஜித் மைதானத்திற்கு காவலர்கள் அழைத்து சென்றனர். நடிகர் அஜீத் இன்று துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க வந்துள்ளார் என்பதை அறிந்து அங்கு சென்ற பத்திரிகையாளர் செய்தி சேகரிக்க சென்றனர். ஆனால், பாதுகாப்பு காரணங்கள் கருதி புகைப்படமோ, வீடியோ ஒளிப்பதிவோ வேண்டாம் என காவல் ஆணையர் உத்தரவிட்டதால், பத்திரிகையாளர் அனுமதிக்கப்படவில்லை.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...