ரத்தினபுரி அருகே வழிதவறி வந்த மயில் வனத்துறையினரால் பத்திரமாக மீட்பு

கோவை : ரத்தினபுரி அருகே வழிதவறி வந்த மயிலை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு, அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

கோவை : ரத்தினபுரி அருகே வழிதவறி வந்த மயிலை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு, அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். 

ரத்தினபுரி அருகே வழிதவறி வந்த மயில் ஒன்று பொதுமக்களைக் கண்டு பயந்து போன நிலையில், ஒரு வாகனத்திற்கு கீழே பதுங்கி இருந்தது. இதனைக் கண்ட சிலர், அங்கு கூடியதால் கூட்டத்தைக் கண்ட மயில் மேலும் அச்சமடைந்தது. இதைக் கண்ட விலங்குகள் நல ஆர்வலர் மெர்லின், உடனடியாக கோவை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 



இதையடுத்து, விரைந்து வந்த அதிவிரைவு படையினர் மயிலை மீட்டு, மீண்டும் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதுபோன்ற விலங்குகள் தொடர்பான அவசர சேவைகளுக்கு 180042545456 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...