நீலகிரி : குன்னூர் அருகே ரண்ணிமேடு ரயில்நிலையம் அருகில் சுற்றி வரும் காட்டு யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குன்னூர் அருகே உள்ள ரண்ணிமேடு ரயில்நிலையப் பகுதியில் பேரிக்காய், பலாப்பழம் உள்ளிட்ட பழ வகைகள் விளைந்துள்ளதால், இவற்றை உண்பதற்காக யானைகள் கூட்டம் அவ்வப்போது வந்து செல்கிறது. இந்த நிலையில், இப்பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக முகாமிட்டுள்ள யானைகள், பழ சீசன் முடிந்ததும் தானாக மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு சென்று விடும் என்பதால், இந்த யானைகளை எந்த விதத்திலும் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இருப்பினும், யானைகள் ரயில் தண்டவாளம் செல்லும் குகைக்குள் சென்று தஞ்சம் அடைந்து விடாமல் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.