டி.ஜே. நினைவு புகைப்பட போட்டி மற்றும் கண்காட்சி கோவையில் இன்று தொடக்கம்

கோவை : லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் சார்பில் நடத்தப்படும் 8-வது டி.ஜே. நினைவு புகைப்பட போட்டி மற்றும் கண்காட்சி கோவையில் இன்று தொடங்கியது.


கோவை : லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் சார்பில் நடத்தப்படும் 8-வது டி.ஜே. நினைவு புகைப்பட போட்டி மற்றும் கண்காட்சி கோவையில் இன்று தொடங்கியது. 



லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் பி. ஜெயவர்த்தனவேலுவின் நினைவாக ஆண்டுதோறும் டி.ஜே. நினைவு புகைப்பட போட்டி மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 8-வது முறையாக இன்று தொடங்கியுள்ளது. இதையொட்டி, இப்போட்டியில் பங்கேற்றவர்கள் www.djmpc.com என்ற இணையதளத்தில் தங்களுடைய சிறந்த புகைப்பட பதிவுகளை செய்தனர். இப் போட்டியின் நடுவர்களாக ஸ்டீபன் இ (சிங்கப்பூர்) தீர்த்திமான் முகர்ஜி (மேற்கு வங்காளம்) மற்றும் அனுப் ஷா (உத்தரகாண்ட்) அடங்கிய குழு சிறந்த புகைப்படங்களை மற்றும் வெற்றியாளரைத் தேர்வு செய்தது. மேலும், இப்போட்டியில் நிர்வாகியாக மருதாசலம் செயலாற்றினார்.



இந்த ஆண்டு போட்டிக்கான தலைப்பாக வனவிலங்கு மற்றும் இயற்கை சார்ந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான போட்டியில் 6,530 புகைப்படங்கள், 1,402 போட்டியாளர்களின் மூலம் பதிவு செய்யப்பட்டது. இதில், சிறந்த இரண்டு புகைப்படங்களுக்கு முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு மேலும் அடுத்த சிறந்த 10 புகைப்படங்களில் போட்டியாளர்களுக்கு அவர்களை அங்கீகரிக்க தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.



வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்களை லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு வழங்கினார். 



பின்னர், இப்போட்டியின் முக்கிய நிகழ்வாக புகைப்பட கண்காட்சியை ராஜியலட்சுமி ஜெயவர்த்தனவேலு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இக்கண்காட்சி இன்று முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை அவினாசி சாலையில் உள்ள கஸ்தூரி ஸ்ரீனிவாசன் ஆர்ட் கேலரியில் நடக்கிறது. இதில், பங்கேற்க அனைவருக்கும் அனுமதி இலவசம். இதில், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, மிகச்சிறந்த வன விலங்குகள் மற்றும் இயற்கை சார்ந்த புகைப்படங்களைக் கண்டுகளிக்கலாம்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...