புதிய கல்வி கொள்கைக்கு எதிராக விரைவில் சீமான் தலைமையில் கருத்தரங்கம் : கோவையில் நாம் தமிழர் கட்சி அறிவிப்பு

கோவை : புதிய கல்வி கொள்கைக்கு எதிராக விரைவில் சீமான் தலைமையில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் விமர்சித்துள்ளார்.

கோவை : புதிய கல்வி கொள்கைக்கு எதிராக விரைவில் சீமான் தலைமையில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- மோடி அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கை என்பதே மோசடி. மாநிலங்கள்தான் கல்வி கொள்கையினை வகுக்க வேண்டும். மத்தியில் ஆளும் மோடி அரசு மாநில உரிமைகளில் கை வைக்கிறது. புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாணவர் பாசறை சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்து வருகிறோம். மக்களிடம் இந்த பிரச்சினை குறித்து பிரச்சாரமாக கொண்டு செல்கின்றோம். 

புதிய கல்வி கொள்கை குறித்த கருத்து கேட்புக் கூட்டங்கள் ரகசியமாக நடத்தப்படுகிறது. இந்த புதிய கல்வி கொள்கை அறிக்கையை பிராந்திய மொழிகளில் கொடுப்படவில்லை. 400-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த புதிய கல்வி அறிக்கையைப் படிக்கக் கூட போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கையெழுத்து பெற இருக்கிறோம். புதிய கல்வி கொள்கைக்கு எதிராக விரைவில் சீமான் தலைமையில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது, எனத் தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, மாநில இளைஞர் பாசறை விஜயராகவன், கோவை மண்டல செயலாளர் வஹாப், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ் கிஷோர், பேரறிவாளன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...