திருப்பூர் : திருப்பூரில் அரசு பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக பூம்புகார் நகர் சாலையை அடைக்கக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகர பகுதியில் அமைந்துள்ள பூம்புகார் நகரானது தமிழக அரசால் 1967-ம் ஆண்டு பட்டா கொடுக்கப்பட்டு உருவாகியுள்ளது. தற்போதைய நிலையில், 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மின்விளக்கு, சாலை வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசின் பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக பூம்புகார் நகரில் உள்ள சாலையை அடைக்கப்போவதாக தகவல் வந்துள்ளதாகவும், அந்த திட்டத்தைக் கைவிடக் கோரியும் பூம்புகார் நகர் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.