சாதிய கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் பா. ரஞ்சித்தின் படங்களை புறக்கணித்து பாடம் புகட்ட வேண்டும் : எச். ராஜா வேண்டுகோள்

திருப்பூர் : எந்தவொரு சான்றும், ஆதாரமும் இல்லாமல் சாதிய கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் இயக்குனர் பா. ரஞ்சித்தின் படங்களை புறக்கணித்து பொதுமக்கள் தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : எந்தவொரு சான்றும், ஆதாரமும் இல்லாமல் சாதிய கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் இயக்குனர் பா. ரஞ்சித்தின் படங்களை புறக்கணித்து பொதுமக்கள் தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் துக்ளக் பத்திரிக்கையின் வாசகர் குழு சார்பில் துக்ளக் தர்பார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றனர். ஆனால், வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவார். எந்தவொரு வரலாற்றுச் சான்றும், ஆதாரமும் இல்லாமல் சாதிய கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். எஸ்ரா.சற்குணம், மோகன். சி.லாசரஸ் உள்ளிட்ட மதமாற்றும் தீய சக்திகளின் கைப்பாவையாக பா. ரஞ்சித் செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது. புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள் மலைக்கிராம, ஏழை, எளிய மக்கள் கல்வி அறிவு பெறுவதை எதிர்ப்பவர்கள்தான். கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு தற்போதுள்ள பெரும்பான்மையே போதும், என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...