உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வெளியாகிறது.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் vs வைல்டு நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமானதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்-ம் பெரும் புகழ் பெற்றவர். யாரும் செல்லாத காட்டுக்குள் சென்று பயணம் செய்வது, பாலைவனத்தில் நடப்பது, தண்ணீரில் குதிப்பது என்று அவரின் சாகசம் பிரமிக்க வைக்கும். இந்த நிலையில், பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதற்கான ட்ரெய்லரை பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இத்தாக்குதல் தொடர்பாக முதல் சில மணிநேரங்கள் பிரதமர் மோடியிடம் இருந்து எந்த கருத்தும் வெளிப்படவில்லை. பின்னர் ஜிம்கார்பெட் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விளம்பர படப்பிடிப்பில் இருந்ததாக கூறப்பட்டது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- புல்வாமாவில் 44 ராணுவ வீரர்கள் பலியானது பிரதமர் மோடி ஷூட்டிங்கில் இருந்திருக்கிறார். இத்தனை பயங்கரமான ஒரு தாக்குதல் நடந்த போதும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்றிருந்திருக்கிறார் என்பதை அவரது சிரிப்பே வெளிப்படுத்துகிறது, இவ்வாறு அவர் சாடியுள்ளார்.