கோவை : சர்வதேச புலிகள் தினத்தையொட்டி கோவை வனத்துறை அலுவலகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கோவை : சர்வதேச புலிகள் தினத்தையொட்டி கோவை வனத்துறை அலுவலகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின் போது, ரத்தினம் கலை மற்றும் அறிவியல், எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். பேரணியில், தங்களது முகங்களில் புலி போன்று வண்ணங்களால் பூசிக்கொண்டும், புலிகள் போன்று உடையணிந்து கலந்து கொண்டு, புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கோவை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊர்வலமாக சென்று சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று மீண்டும் மாவட்ட வனத்துறை அலுவலகம் வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தின் போது, மாணவ மாணவியர் புலிகள் பற்றிய விழிப்புணர்வு அடங்கிய வசனங்களை கோஷமிட்டவாறு ஊர்வலமாகச் சென்றனர்.