சூலூர் அருகே லாரி மோதிய கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழப்பு

கோவை : கோவை எல்.என்.டி புறவழிசாலை வெள்ளலூர் பிரிவு அருகே அதிவேகமாக வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் பெண் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை : கோவை எல்.என்.டி புறவழிசாலை வெள்ளலூர் பிரிவு அருகே அதிவேகமாக வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் பெண் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 



பாலக்காடு மாவட்டம் வாழப்புழா பகுதியைச் சேர்ந்தவர் முகமது பஷீர் (44). இவர் KL 52 B 1014 என்ற எண் கொண்ட காரில் தனது கட்டிட நிறுவனத்தில் கான்ட்ராக்ட் பணியில் இருக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை கன்னியாகுமரிக்கு மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்காக அழைத்துச் சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் கோவை எல்.என்.டி. புறவழிச்சாலை வெள்ளலூர் பிரிவு அருகே வரும் பொழுது, TN 38 CH 0213 என்ற எண் கொண்ட ஈச்சர் லாரி, முகமது பஷீர் ஓட்டி வந்த காரின் மீது அதிவேகமாக மோதியது. இதில், காரில் பயணம் செய்த ஒரு பெண்ணும், ஆணும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.



மேலும், காருக்குள் இருந்த மூன்று பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இருவர் பலியாகினர். மீதம் உள்ள ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்களில் விபரம் :- முகமது பஷீர் (42), ஹிரலா சிகாரி (28), கவுரங்கா பண்டிட் (30), லலிதா மொண்டல் (31), மிதுன் பண்டிட் (27) என்பது தெரிய வந்துள்ளது. 

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுலாவுக்கு சென்றவர்கள் சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...