3 நிமிடங்களில் 10,000 மரக்கன்றுகளை நடவு செய்து கோவை தொண்டு நிறுவனம் புதிய சாதனை

கோவை : சிறுதுளி அமைப்பின் முயற்சியால் பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் 3 நிமிடங்களில் 10,000 மரக்கன்றுகளை நடவு செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.


கோவை : சிறுதுளி அமைப்பின் முயற்சியால் பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் 3 நிமிடங்களில் 10,000 மரக்கன்றுகளை நடவு செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 



காடுகள் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இசட்.எஃப். வின்ட் பவர் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சிறுதுளி அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் முயற்சிக்கு ஏற்பாடு செய்தன. 



அதன்படி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள பாரதி வனம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 25-க்கும் மேற்பட்ட கல்வு நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், என்.எஸ்.எஸ். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 5,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, 3 நிமிடங்களில் 10,154 மரக்கன்றுகளை நடவு செய்தனர். 



இந்தத் திட்டத்தை சிறுதுளி அமைப்பின் தலைவர் எஸ்.வி. பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இதனிடையே, குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவு தினத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக சிறுதுளி அமைப்பின் நிர்வாக இயக்குநர் வனிதா மோகன் கூறினார்.



Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...