கோவை புத்தகத் திருவிழாவில் மீண்டும் வந்த 'பாரதி யார்' : 100-க்கும் மேற்பட்டோர் கண்டுகளிப்பு

கோவை : கோவை புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக 'பாரதி யார்..?' என்கிற மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நாடகம் நேற்று நடைபெற்றது.

கோவை : கோவை புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக 'பாரதி யார்..?' என்கிற மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நாடகம் நேற்று நடைபெற்றது. 



சென்னை எஸ்.பி. கிரியேஷன்ஸ் தயாரித்து வழங்கிய இந்த நாடகத்தினை இசைக்கவி ரமணன் இயக்கி பாரதியாராக நடித்திருந்தார். பாரதியின் மரணத்தில் இருந்து, அவர் வாழ்வின் முக்கியமான சம்பவங்கள் கதையாக சொல்லும் விதமாக நாடகம் துவங்கியது. காசியில் இருந்து பாரதியார் எட்டயபுர மகாராஜாவின் அழைப்பினால் எட்டயபுரம் வந்து வாழ்ந்த வாழ்க்கை, பின் சுதேசமித்ரன் பத்திரிக்கையில் பணியாற்றியது, சென்னை வாழ்க்கை, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு, தேசபக்தி, தேசத் தலைவர்களுடனான சந்திப்புகள், கிருஷ்ணமாச்சார் உதவியுடன் புதுச்சேரியில் வாழ்ந்தது, புதுச்சேரியில் அவர் வாழ்ந்த வாழ்க்கை, வ.உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் சுப்ரமணியம் சிவா ஆகியோருடனான நட்பு, மற்றும் அவர்கள் சிறையில் இருந்த போது பாரதியார், அவரின் மனைவி செல்லமாவுடன் சென்று உரையாடிய தருணம், பாரதியாரின் வறுமையான வாழ்க்கை, பாரதி பாரதிதாசன் சந்திப்பு ஆகியவை நாடகத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தனர். 

பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் குறித்து பாரதியார் சிந்திக்க உந்துதலாக இருந்த நிவேதிதா அம்மையார் பாரதியார் சந்திப்பு காட்சி பரவசப்படுத்தியது. சுமார் 30-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த நாடகத்தில் நடித்திருந்தனர். இந்நாடகம் இசை, நாட்டிய நாடகமாக அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகத்தை குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். குழந்தைகளுக்கு மிகப்பெரும் அறிமுகமாக அமைந்தது பாரதி யார்..? நாடகம்.



இது போன்ற நாடகங்கள் பல நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது தான் மறைந்த பாரதி போன்ற யுக தலை குறித்து வரும் தலைமுறைக்கு தெரியும் என்று பார்வையாளர்கள் வேண்டுகோள் வைத்தனர். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....