கோவை : கோவை புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக 'பாரதி யார்..?' என்கிற மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நாடகம் நேற்று நடைபெற்றது.

சென்னை எஸ்.பி. கிரியேஷன்ஸ் தயாரித்து வழங்கிய இந்த நாடகத்தினை இசைக்கவி ரமணன் இயக்கி பாரதியாராக நடித்திருந்தார். பாரதியின் மரணத்தில் இருந்து, அவர் வாழ்வின் முக்கியமான சம்பவங்கள் கதையாக சொல்லும் விதமாக நாடகம் துவங்கியது. காசியில் இருந்து பாரதியார் எட்டயபுர மகாராஜாவின் அழைப்பினால் எட்டயபுரம் வந்து வாழ்ந்த வாழ்க்கை, பின் சுதேசமித்ரன் பத்திரிக்கையில் பணியாற்றியது, சென்னை வாழ்க்கை, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு, தேசபக்தி, தேசத் தலைவர்களுடனான சந்திப்புகள், கிருஷ்ணமாச்சார் உதவியுடன் புதுச்சேரியில் வாழ்ந்தது, புதுச்சேரியில் அவர் வாழ்ந்த வாழ்க்கை, வ.உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் சுப்ரமணியம் சிவா ஆகியோருடனான நட்பு, மற்றும் அவர்கள் சிறையில் இருந்த போது பாரதியார், அவரின் மனைவி செல்லமாவுடன் சென்று உரையாடிய தருணம், பாரதியாரின் வறுமையான வாழ்க்கை, பாரதி பாரதிதாசன் சந்திப்பு ஆகியவை நாடகத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தனர்.
பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் குறித்து பாரதியார் சிந்திக்க உந்துதலாக இருந்த நிவேதிதா அம்மையார் பாரதியார் சந்திப்பு காட்சி பரவசப்படுத்தியது. சுமார் 30-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த நாடகத்தில் நடித்திருந்தனர். இந்நாடகம் இசை, நாட்டிய நாடகமாக அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகத்தை குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். குழந்தைகளுக்கு மிகப்பெரும் அறிமுகமாக அமைந்தது பாரதி யார்..? நாடகம்.

இது போன்ற நாடகங்கள் பல நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது தான் மறைந்த பாரதி போன்ற யுக தலை குறித்து வரும் தலைமுறைக்கு தெரியும் என்று பார்வையாளர்கள் வேண்டுகோள் வைத்தனர்.