கோவை : எஸ்.பி.ஐ வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டு விவரத்தைக் கண்டித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியை நாளை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- எஸ்.பி.ஐ வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தி இருக்கின்றது. 8,600 கிளார்க் வேலைக்கான இடஒதுக்கீடு கட் ஆப் மதிப்பெண்களை எஸ்.பி.ஐ. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 28 மதிப்பெண் என கட் ஆப் நிர்ணயம் செய்துள்ளது. மிக மிக பின்தங்கிய மக்களுக்கு இல்லாத சலுகையை உயர்சாதியினருக்கு எஸ்.பி.ஐ. வழங்கியுள்ளது. இது 97 சதவீத மக்களுக்கு எதிரானது.
பள்ளி பாடங்களில் 35 மதிப்பெண் தேர்ச்சி என்ற நிலையில் பொருளாதாரத்தின் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 28 மதிப்பெண் என வைத்து இருப்பது சமூகநீதிக்கு கேடானது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் இந்த நடவடிக்கையினை கண்டித்து கோவை ரயில்நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியை நாளை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்த இருக்கின்றோம், எனத் தெரிவித்தார்.