அரசு மதுபானக் கடைகளால் அல்லல்படும் பில்லிகம்பை, கட்டபெட்டு கிராம மக்கள்

நீலகிரி : கோத்தகிரி பகுதியில் உள்ள பில்லிகம்பை மற்றும் கட்டபெட்டு ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு அரசு மதுபானக் கடைகளால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நீலகிரி : கோத்தகிரி பகுதியில் உள்ள பில்லிகம்பை மற்றும் கட்டபெட்டு ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு அரசு மதுபானக் கடைகளால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.



கோத்தகிரியை சுற்றியுள்ள 9 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பில்லிகம்பை மற்றும் கட்டபெட்டு ஆகிய கிராமங்களில் உள்ள மதுபானக் கடைகளைத் தேடி குடிமகன்கள் அதிகளவில் படையெடுத்து வருகின்றனர். 



இதனால், கிராம மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பார் வசதியில்லாததால், குடிமகன்கள் கடை முன்னே மது அருந்திவிட்டு பாட்டில்களை சாலையில் போட்டுவிடுவதாலும், மதுக்கடை அருகே பேருந்து நிறுத்தம், பள்ளி, வங்கி, நியாய விலை கடை உள்ளதால் அடிப்படைத் தேவைகளுக்காக செல்வதே அவர்களுக்கு சிரமமாக இருந்து வருகிறது. 

இது தொடர்பாக, பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், விரைவில் 8 ஊர் கிராம மக்களுடன் கலந்தாலோசித்து மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...