வனவிலங்குகள் செல்லும் பாதைகளை பயன்படுத்தும் உலிக்கல் பவானி எஸ்டேட் சாலை மக்கள் : சாலை அமைத்துத் தர கோரிக்கை

நீலகிரி : முறையான சாலை வசதி இல்லாததால், உயிரை பிணையம் வைத்து வனவிலங்குகள் செல்லும் பாதைகளை பயன்படுத்தி வருவதாகவும், தார் சாலை அமைத்து தர வேண்டும் என குன்னூர் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பவானி எஸ்டேட் சாலை பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி : முறையான சாலை வசதி இல்லாததால், உயிரை பிணையம் வைத்து வனவிலங்குகள் செல்லும் பாதைகளை பயன்படுத்தி வருவதாகவும், தார் சாலை அமைத்து தர வேண்டும் என குன்னூர் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பவானி எஸ்டேட் சாலை பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பவானி எஸ்டேட் சாலை உள்ளது. இங்கு தார் சாலை மிகவும் மோசமாகி விட்டது. பல ஆண்டுகள் ஆகியும் சாலைகள் அமைக்கப்படாததால் யானைகள் மற்றும் வனவிலங்குகள் செல்லும் பாதையில் பள்ளி மாணவ, மாணவிகள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவ சிகிச்சைக்காகவும், பேருந்து வசதிக்காகவும் சுமார் 7 கிலோ மீட்டர் முதல் 14 கிலோ மீட்டர் வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் கூட செல்வதில்லை.

அவசர காலங்களில் சேலாஸ் பகுதியில் உள்ள ஜீப் 1,000 ரூபாய் பெற்றுக் கொண்டு செல்கின்றனர். இரவு நேரங்களில் இப்பகுதி மக்கள் சேலாஸ் பகுதியில் உள்ள பேருந்து நிழல் குடையில் தங்கி செல்கின்றனர். எனவே, சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், எந்தப் பணிகளும் நடைபெறாததால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இது குறித்து கருத்து தெரிவித்த உலிக்கல் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் கூறுகையில், "இப்பகுதியில் நீண்ட நாள் பிரச்சினையான பக்காசூரன் மலை சாலை நிறைவடைந்து விட்டது. நீண்ட நாள் கோரிக்கையான ஆனைப்பள்ளம் சாலைப்பணி நடைபெற்று வருகிறது. இதுபோல, இந்த சாலைப் பணியும் விரைவில் அமைத்துக் கொடுக்கப்படும்," என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...