அன்னூர் அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்து : இரு இளைஞர்கள் உயிரிழப்பு

கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாரதி ராஜா மற்றும் மாணிக்கராஜ். பொறியியல் பட்டதாரிகளான இருவரும் இன்று மாலை தனது நண்பர்களை காண அன்னூருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஜே.ஜே. நகர் அருகே வந்து கொண்டிருந்த போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த பாரதிராஜா மற்றும் மாணிக்கராஜ் தூக்கி வீசப்பட்டனர். 

இந்த சம்பவத்தில் பாரதிராஜா தலை மற்றும் காது பகுதியில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கால் மற்றும் தலையில் பலத்த காயமடைந்த மாணிக்கராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மாணிக்கராஜூம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் நிகழ்விடத்திற்கு உயிரிழந்த பாரதிராஜாவின் உடலை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....