பெங்களூரூ : கர்நாடாகவில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான கணக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், பெங்களூரூவில் அடுத்த 48 மணிநேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 18-ம் தேதி முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. இன்று மாலை வரை அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில், பெங்களூரூவில் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை பெங்களூரூ காவல் ஆணையர் அலோக் குமார் பிறப்பித்துள்ளார். அம்மாநில சட்டப்பேரவையான விதானா சவுதாவை சுற்றி நிற்க முதற்கட்டமாக தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது பெங்களூரூ மாநகர் முழுவதும் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவின் காரணமாக, மதுபானக் கடைகள் மற்றும் சொகுசு மதுபான விடுதிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரூ காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.