வெள்ளப்பெருக்கு காரணமாக 4-வது நாளாக கோவை குற்றாலத்தில் குளிக்கத் தடை

கோவை : தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவியில் 4-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை : தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவியில் 4-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடும் வறட்சியின் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி சூழல் சுற்றுலாப் பகுதியான கோவை குற்றாலம் மூடப்பட்டது. இந்த சூழலைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் பகுதி சீரமைப்பு மற்றும் சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழையினால் கோவை குற்றாலம் ஓரளவிற்கு நீர்வரத்தைப் பெற்றுள்ளதோடு, சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில், 108 நாட்களுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் கோவை குற்றாலம் கடந்த 12-ம் தேதி திறக்கப்பட்டது. 

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மழை அடிவாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க கடந்த 20-ம் தேதி தடை விதிக்கப்பட்டது. அருவியில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், தொடர்ந்து இந்த தடை 4-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. வரும் நாட்களில் பெய்யும் மழையின் அளவைப் பொருத்து கோவை குற்றாலம் அருவி திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...