பெண் பயணியின் பொருட்களை எட்டி உதைத்து தகாத வார்த்தைகளில் திட்டிய ரயில்வே டிக்கெட் பரிசோதகர் : மனிதநேயத்துடன் தட்டிக்கேட்ட ரயில்வே தலைமை காவலருக்கு மிரட்டல்

கோவை : கோவை ரயில்நிலையத்தில் மூன்றாவது நடைமேடையில் ரயிலில் ஏறிய பெண் பயணியை டிக்கெட் பரிசோதகர் தகாத வார்த்தையில் பேசியதுடன், அவர் கொண்டு வந்தப் பொருட்களை எட்டி உதைத்து அவமானப்படுத்திய சம்பவம் அங்கிருந்தவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.


கோவை : கோவை ரயில்நிலையத்தில் மூன்றாவது நடைமேடையில் ரயிலில் ஏறிய பெண் பயணியை டிக்கெட் பரிசோதகர் தகாத வார்த்தையில் பேசியதுடன், அவர் கொண்டு வந்தப் பொருட்களை எட்டி உதைத்து அவமானப்படுத்திய சம்பவம் அங்கிருந்தவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. 

கோவை ரயில் நிலையத்திற்கு தினமும் 70-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதில், சாதாரண நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பயணிகளும், வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் விழா நாட்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் பயணம் செய்கின்றனர். இப்படி வரும் பயணிகளிடம் சில டிக்கெட் பரிசோதகர்கள் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வாக ஏற்கனவே பல புகார்கள் வந்துள்ளன.



இந்த நிலையில், இன்று சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் வியாபார நிமித்தமாக கோவை வந்துள்ளார். இங்கு அவர் தனது பணியை முடித்து விட்டு, பிற்பகலில் தான் கொண்டு வந்த பாத்திரங்களுடன் கோவை சந்திப்பிலிருந்து சேலம் செல்ல ரயிலில் ஏறியுள்ளார். அப்போது, அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் மாரியம்மாளிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார். இதற்கு மாரியம்மாள் டிக்கெட் தனது கணவரிடம் உள்ளதாகவும், அவர் முன்னே உள்ள ரயில் பெட்டியில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர்கள் மாரியம்மாளை ரயிலை விட்டு இறங்கும்படி வற்புறுத்தினர்.



பின்னர், மாரியம்மாள் தனது கணவரிடம் டிக்கெட்டை வாங்கி வருகிறேன் என கூறியபோது, (ஸ்கோடு டி.டி.ஆர்.) டிக்கெட் பரிசோதகர் பத்மகுமார், அவரை தகாத வார்த்தையில் பேசியதுடன், அவர் கொண்டு வந்த பாத்திரங்களையும் எட்டி உதைத்து அவமானப்படுத்தியுள்ளார். இதைக் கண்ட ரயில்வே தலைமை காவலர் வீரமுத்து, பயணிகளிடம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்றும், இது தவறான செயல் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பத்மகுமார் என்ற டிக்கெட் பரிசோதகரான எனக்கு அறிவுரை சொல்கிறாயா..? என்று காவலரிடம் பொது இடத்தில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவருக்கு மிரட்டல் விடும் தொனியிலும் பேசியுள்ளார். அப்போது, அங்கு வந்த மற்ற இரண்டு டிக்கெட் பரிசோதகர்களும், பத்மகுமாருக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர்களிடம், அனைத்தும் கேமராவில் பதிவாகி கொண்டிருப்பதாக ரயில்வே தலைமை காவலர் கூறியதையடுத்து, டிக்கெட் பரிசோதகர்கள் மூன்று பேரும் அந்த இடத்தைவிட்டு கலைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாரியம்மாள் கூறும்போது :- நான் முட்டை வியாபாரம் செய்து வருகிறேன். அதற்காக சேலத்தில் இருந்து கோவை வருவேன். இப்படி இருக்க இன்று சேலத்தில் இருந்து கோவை வந்து எனது பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சேலம் செல்வதற்காக நானும், என் கணவரும் வேறு வேறு ரயில் பெட்டிகளில் ஏறினோம். அப்போது, திடீரென டிக்கெட் பரிசோதகர் வந்த பொழுது, நான் என் கணவரிடம் டிக்கெட் இருக்கிறது என்றேன். ஆனால், அந்த பரிசோதகர்கள் என்னை ரயிலில் இருந்து இறக்கியதுடன், நான் கொண்டு வந்திருந்த பாத்திரங்களை எட்டி உதைத்தனர். மேலும், தகாத வார்த்தைகளிலும் பேசினர். டி.டி.ஆர். என்றால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமா..?, பொது இடத்தில் வைத்து இப்படி நடந்து கொண்டது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல, போலீசார் ஒருவர் வந்து நியாயத்தை கேட்டால் அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டுகின்றனர், என்றார் வேதனையுடன்.

கோவை ரயில் நிலையத்தில் பெண் பயணி என்று கூட பாராமல் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் அவர் கொண்டு வந்த பொருட்களை காலால் எட்டி உதைத்து அவமானப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...