கோவை : வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே மழைநீரை சேமிக்கும் மகத்தான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மழைநீர் சேமிப்பின் அவசியம் பற்றியும், அதனால் நமக்கு மட்டுமின்றி, நம் அடுத்த தலைமுறைக்கும் விளையும் பயன்கள் பற்றியும் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் பெய்த மழையில், எத்தனை சதவிகித நீரை நாம் சேமித்து வைத்திருக்கிறோம்..?. அரசு தொடர்ந்து தன் கடமையை செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், மழை நீர் சேமிப்பை ஒரு குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ மட்டும் செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அவரவர் இருப்பிடத்தில் மழை நீரை சேமிப்பதே இதற்கு நிரந்தரத் தீர்வாகும்.
புரட்சித்தலைவி அம்மாவின் பாதையில் நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மழைநீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இதை கருத்தில் கொண்டு, தமிழக மக்கள் அனைவரையும் வட கிழக்கு பருவ மழைக்கு முன், மழை நீரை சேமிக்கும் மகத்தான பணியில் ஈடுபடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன், என வேண்டுகோள் விடுத்துள்ளார்.