மழைநீரை சேமிக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட வேண்டும் : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள்

கோவை : வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே மழைநீரை சேமிக்கும் மகத்தான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை : வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே மழைநீரை சேமிக்கும் மகத்தான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மழைநீர்‌ சேமிப்பின்‌ அவசியம்‌ பற்றியும்‌, அதனால்‌ நமக்கு மட்டுமின்றி, நம்‌ அடுத்த தலைமுறைக்கும்‌ விளையும்‌ பயன்கள்‌ பற்றியும்‌ அனைவரும்‌ அறிந்ததே. சமீபத்தில்‌ பெய்த மழையில்‌, எத்தனை சதவிகித நீரை நாம்‌ சேமித்து வைத்திருக்கிறோம்..‌?. அரசு தொடர்ந்து தன்‌ கடமையை செய்து கொண்டுதான்‌ இருக்கிறது. ஆனால்‌, மழை நீர் சேமிப்பை ஒரு குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ மட்டும்‌ செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அவரவர்‌ இருப்பிடத்தில்‌ மழை நீரை சேமிப்பதே இதற்கு நிரந்தரத் தீர்வாகும்‌.

புரட்சித்தலைவி அம்மாவின்‌ பாதையில்‌ நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மழைநீர்‌ சேமிப்பின்‌ அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்‌. இதை கருத்தில்‌ கொண்டு, தமிழக மக்கள்‌ அனைவரையும்‌ வட கிழக்கு பருவ மழைக்கு முன்‌, மழை நீரை சேமிக்கும்‌ மகத்தான பணியில்‌ ஈடுபடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்‌, என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...