திருப்பூர் : திருப்பூரில் தனியார் சாய சலவை பட்டறையில் வேலை செய்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சாயக்கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர்.

திருப்பூர் மன்னரை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான துணிகளுக்கு நிறமேற்றக்கூடிய சாய சலவை பட்டறை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் துணிகளை நிறமேற்றக்கூடிய பணிகள் நடைபெறும். நிறமேற்றிய பின்பு சாயக்கழிவு நீர் அங்குள்ள தொட்டிக்குள் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும்.

இந்த நிலையில், பாய்லரில் எரிக்கக்கூடிய மரங்களை வெட்ட வந்த தொழிலாளர்களில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் மதியம் மரம் வெட்டும் பணியினை முடித்து விட்டு, சாயக்கழிவு நீர் இருந்த தொட்டியின் திட்டின்மேல் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, தொட்டிக்குள் விழுந்துள்ளார். சாயக்கழிவு நீர் தொட்டிக்குள் 5 அடி அளவில் இருந்த காரணத்தால் பிரதீப் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் போலீசாரின் உதவியுடன் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.