கோவையில் வங்கி அதிகாரிகள் துணையுடன் தனியார் நிறுவனத்தில் ரூ. 6 கோடி கையாடல் : இருவர் கைது

கோவை : கோவையில் வங்கி அதிகாரிகள் துணையுடன் தனியார் நிறுவனத்தின் கணக்கில் இருந்து ரூ. 6 கோடியை கையாடல் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை : கோவையில் வங்கி அதிகாரிகள் துணையுடன் தனியார் நிறுவனத்தின் கணக்கில் இருந்து ரூ. 6 கோடியை கையாடல் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை - அவினாசி சாலை கருமத்தம்பட்டியில் தனலட்சுமி ஸ்பிண்டெக்ஸ் என்ற பெயரில் நடராஜன் மற்றும் அவரது மனைவி லீலாவதி ஆகியோர் நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்த போது, வங்கியில் கையிருப்பாக வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் உட்பட 6 கோடி ரூபாய் வரை குறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவில் நடராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அதே நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வந்த கண்ணன் மற்றும் கணக்காளர் விவேக்குமார் என்கிற வினோத் ஆகிய இருவரும் முறைகேடாக நிறுவன நிதியை தங்களது மனைவி பெயர்களுக்கு மாற்றம் செய்தது தெரியவந்தது.



இதற்கு நிறுவனத்தின் கணக்குகள் வைத்திருந்த திருச்சி சாலை தமிழ்நாடு வங்கியின் துணை பொதுமேலாளர் சிவசுப்ரமணியம் மற்றும் மேலாளர் சிவசந்திரன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கண்ணன் மற்றும் விவேக்கை கைது செய்துள்ள போலீசார் இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வங்கி அதிகாரிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இது தொடர்பாக உரிமையாளரின் உறவினர் ராம்குமார் கூறுகையில், "பல கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுவதால் ரூ. 6 கோடி அளவிற்கு மோசடி நடைபெற்றதை அரிய காலதாமதம் ஏற்பட்டது. நம்பிக்கை அடிப்படையில் அளித்த வசதிகளை கண்ணன் மற்றும் வினோத் ஆகியோர் தவறாக பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்," எனக் கூறினார். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...