நீலகிரி : உதகை நொண்டிமேடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக கிடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உதகை அடுத்த நொண்டிமேடு பகுதியில் வசித்து வருபவர் உமா (43). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தனது இருமகன்களுடன் தனியே வசித்து வந்துள்ளார். மூத்த மகன் உமாசங்கர் கோவையில் பணிபுரிந்து வரும் நிலையில், இரண்டாவது மகன் அபிஷேக் தனியார் விடுதியில் இரவு பணிக்கு சென்று வருகிறார். அபிஷேக் இன்று காலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த போது, தாய் உமா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு, கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள நொண்டிமேடு பகுதியில் பெண் கழுத்து அறுத்து சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.