கோவை : மாங்கரை வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ, வனத்துறையினரின் துரித நடவடிக்கையால் அணைக்கப்பட்டது.

கோவை மாவட்ட வனப்பகுதிக்குட்பட்ட பகுதியாக மாங்கரை உள்ளது. இங்குள்ள வனத்துறையினர் சோதனைச் சாவடிக்கு எதிரே உள்ள மாங்கரை வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால், வெளியேறியப் புகையைக் கண்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால், மாபெரும் காட்டுத் தீ தவிர்க்கப்பட்டது.

கோவை வனப்பகுதியில் கடந்த கோடை காலத்தில் 6 முறை காட்டுத்தீ ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.