கோவை : வனவிலங்குகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக யுவபாரதி பப்ளிக் ஸ்கூலில் வனவிலங்கு புகைப்பட கண்காட்சி தொடங்கியது.

சோமையம்பாளையத்தில் உள்ள யுவபாரதி பப்ளிக் ஸ்கூலில் சிந்தனை வாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் கண்காட்சி நடைபெற்றது. இந்த வாரம் முழுவதும் நடக்கும் இந்த விழாவில், புதிய சிந்தனைகள் வரவேற்கப்படுகின்றன. இந்த வனவிலங்கு புகைப்பட கண்காட்சியை மாவட்ட வனத்துறை அதிகாரி டி. வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். அப்போது, தமிழ் மறவன் பட்டாம்பூச்சிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டதை மாணவர்களிடையே அவர் தெரிவித்தார். மேலும், வனவிலங்குகளைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்த வன அதிகாரி டி. வெங்கடேஷ், இது தொடர்பான விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக, முன்னாள் ஐ.எஃப்.எஸ். அதிகாரி சி. பத்ரசாமி, ஐ.எஃப்.எஸ். அதிகாரியாவதற்கான நுணுக்கங்களைப் பற்றி மாணவர்களிடையே விளக்கிக் கூறினார்.