தினகரனுக்கு தொடர்ந்து சரிவு : அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையவிருக்கும் இசக்கி சுப்பையா

சென்னை : அ.ம.மு.க.வை சேர்ந்த இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலகி, வரும் 6-ம் தேதி அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : அ.ம.மு.க.வை சேர்ந்த இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலகி, வரும் 6-ம் தேதி அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அ.ம.மு.க.வில் இருந்து இசக்கி சுப்பையா விலக போகிறார் என்று நேற்றே தகவல் வெளியானது. இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாளை அதாவது இன்று தனது அரசியல் ரீதியான முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று இசக்கி சுப்பையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- சில நிமிடங்களுக்கு முன்பு டிடிவி தினகரன் அளித்த பேட்டியால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டது. தினகரன் கிண்டல் செய்தார். இது ஒரு தலைவருக்கு அழகல்ல. டி.டி.வி. தினகரன் பதற்றத்தில் இருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் ஈர்க்கப்பட்டு கட்சிக்கு வந்தோம். டிடிவி தினகரனே தொண்டர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்தான். ஜூலை 6-ம் தேதி அ.தி.மு.க.வில் 20 ஆயிரம் தொண்டர்களுடன் இணைகிறேன். மக்களின் முதலமைச்சராக பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய் கழகத்திற்கே செல்கிறோம். சுயநலம் பார்ப்பதாக இருந்தால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதாவில் சேர்ந்து இருப்பேன், இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அசோக் நகரில் அ.ம.மு.க. தலைமை அலுவலகம் இருக்கும் இடம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...