கோவை : மேட்டுப்பாளையத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் அமைந்துள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் தேர் திருவிழா கடந்த 23-ம் தேதி கொடி ஏற்று நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த ஒரு வாரமாக காலை, மாலை என ஆலயத்தில் சிறப்பு திருப்பலி எழுச்சி நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தோனியார் திருத்தேருக்கு ஆலய பங்கு பாதிரியார் ரொசாரியோ சிறப்பு பூஜைகள் செய்து திருத்தேரின் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஆலயத்திலிருந்து தொடங்கிய இந்த திருத்தேரானது மேட்டுப்பாளையம் நகரத்தின் முக்கிய சாலையான உதகை சாலை, சிறுமுகை சாலை என பேருந்து நிலையம் வழியே வலம் வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.