திருப்பூர் : திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சாம்பலால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
திருப்பூர் : திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சாம்பலால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் கல்லூரி சாலை ஆவாரங்காடு தோட்டம் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடியிருப்புக்கு அருகே செயல்பட்டு வரும் தனியார் காம்பாக்டிங்க் நிறுவனம் தங்களது பாய்லர்களை சரியாக பராமரிக்காததால், கடந்த சில நாட்களாக பாய்லரில் இருந்து வெளியேறும் சாம்பல்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் விழுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், தங்கள் குடியிருப்பு பகுதி முழுவதுமே மாசடைவதோடு, சமைக்கும் உணவுகளிலும் தண்ணீர்களிலும் விழுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகக் கூறும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.