நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் : நடிகர் விவேக் வேண்டுகோள்

நீலகிரி : பசுமை நிறைந்த மாவட்டமான நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என உதகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்தார்.

நீலகிரி : பசுமை நிறைந்த மாவட்டமான நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என உதகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்தார். 



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மிக முக்கியமான மலைத்தொடராக இருந்து வரும் நிலையில், அரிய வகை தாவரங்கள், வனவிலங்குகள், பறவைகள், நீர் உற்பத்தி ஆகும் மிக முக்கிய மலைத்தொடராகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், பிளாஸ்டிக்கை சாப்பிட்டு வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனிடையே, மாவட்ட நிர்வாகம் சார்பில் உதகை அடுத்த எல்லநள்ளியில் பிளாஸ்டிக்கை தடுப்பது குறித்த விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.



இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் விவேக், அரிய வகை மரங்களை நடவு செய்தும், பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



இதன்பின் செய்தியாளர்களிடம் நடிகர் விவேக் பேசுகையில், "நீலகிரி மாவட்டம் உயிர்ச்சூழல் மண்டலத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. பசுமை நிறைந்த நீலகிரிக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு சுற்றுலா வரும்போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து வர வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...