கோவை : தொல்லியல் துறைக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்து கோவையில் பராமரிப்பின்றி உள்ள பழங்கால குகை ஓவியங்களைப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை ஆட்சியரிடம் இன்று தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தினர் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குமிட்டிபதி, பொன்பரப்பி, வேட்டைக்காரன் மலை போன்ற பகுதிகளில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், அவை தற்போது உரிய பராமரிப்பின்றி உள்ளது. மேலும், குகைகளை பார்வையிட செல்லும் சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். சிலர் கரி உள்ளிட்டவற்றைக் கொண்டு ஓவியங்கள் மீது பெயர்களை வரைந்து ஓவியங்களை சேதப்படுத்துகின்றனர்.

இது தொடர்பாக தொல்லியல் துறைக்குப் புகார் அளித்தால், போதிய நிதி இல்லாததால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகக் கூறுகின்றனர். எனவே, உரிய நிதியை ஒதுக்கி விலைமதிப்பற்ற பழங்கால ஓவியங்களைக் காக்க கம்பி வேலிகள் அமைத்தும், சி.சி.டி.வி. மற்றும் பாதுகாவலர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.