ஆணவ கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும் : தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் தகவல்

கோவை : ஆணவ கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கமிஷன் பரிசீலிக்கும் என தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை : ஆணவ கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கமிஷன் பரிசீலிக்கும் என தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த 27-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக நடைபெற்ற ஆணவ கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் முருகன் கோவை வந்தார்.

அப்போது, கோவை பந்தய சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 2 பேரும் கைது செய்யப்படுவார்கள். முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 4,12,500 இன்று வழங்கப்பட உள்ளது. மேலும், அவர்களுக்கு வழங்க வேண்டிய மொத்த தொகையான ரூ. 8,25,000 இந்த வாரத்திலேயே கொடுக்கப்படும். அவர்களது கோரிக்கையான அரசு பணிக்கான ஆணை வழங்கப்படும். 

எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்படியான அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு கிடைக்கும். குற்றவாளிகள் மீது காவல்துறை மூலம் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் தேவைப்பட்டால் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் வழக்கில் இணைக்க வேண்டும். ஆணவ படுகொலைகள் தடுக்க சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். தொடர்ந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்வோம். ஆணவ கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கமிஷன் பரிசீலிக்கும். மக்கள் தொகை அதிகமாக இருக்கும் பகுதிகளில் உத்தரபிரதேசத்தை விட கேரளாவில் அதிக அளவில் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் அதிகமாக உள்ளது, என தெரிவித்தார்.

Newsletter

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...