கோவை : பிரிந்து சென்ற எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் அ.தி.மு.க.விற்கு திரும்பி வந்துவிடுவார்கள் எனவும், சந்தர்ப்பவாதிகள்தான் தி.மு.க.விற்கு செல்வார்கள் என சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
கோவை : பிரிந்து சென்ற எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் அ.தி.மு.க.விற்கு திரும்பி வந்துவிடுவார்கள் எனவும், சந்தர்ப்பவாதிகள்தான் தி.மு.க.விற்கு செல்வார்கள் என சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- அ.தி.மு.க.வை பொறுத்தவரைக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்பவர்களால் துளி பாதிப்பும் கூட இல்லை. சிறப்பாக பணியாற்றியவர்கள் மீண்டும் வருவார்களேயானால் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அவர்களை ஏற்றுக் கொள்வார்கள். இயக்கம் வலுவாக உள்ளது. சந்தர்ப்பவாதிகளைப் பற்றி கவலை இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவார்கள். அ.ம.மு.க.வில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் அ.தி.மு.க.வில் இணைய வேண்டும். அ.ம.மு.க. தோன்றியதற்கான காரணமே சரியில்லை. நாட்டு மக்களின் சேவைக்காகவே கட்சி துவங்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க.வை அழிப்பதற்காக அ.ம.மு.க. துவங்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளாக மழை இல்லை. இருந்தபோதிலும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அ.தி.மு.க. அரசு அனைத்து வழியிலும் போராடிக் கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சியிலும் இதுபோன்ற குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையை சமாளிக்கின்ற ஆற்றல், அறிவு, சக்தி அ.தி.மு.க.விற்கு உள்ளது. அ.தி.மு.க. என்பது தாய் வீடு இங்கிருந்து சென்றவர்கள் மீண்டும் வரலாம். கிராம அளவில் பிரிந்து சென்ற நிர்வாகிகள் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளனர். சந்தர்ப்பவாதிகள் தி.மு.க.விற்கு செல்கின்றனர்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் சர்வாதிகார மனப்பான்மை இல்லாமல் ஒருவருடன் ஒருவர் கலந்து பேசி முடிவுகள் எடுக்கப்படுகிறது. இரட்டை தலைமை எல்லாம் இங்கு பிரச்சினையில்லை. சிறப்பான முறையில் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வின் பரம்பரை விரோதி தி.மு.க., துரோகி அ.ம.மு.க. துரோகிகள் இல்லாமல் போய் கொண்டு இருக்கின்றனர். மக்களின் மனதைப் புரிந்து சிறப்பான ஆட்சியை மக்களுக்குக் கொடுப்போம், என தெரிவித்துள்ளார்.