நீலகிரியில் சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக ஆர்.எ.எப். படை வீரர்கள் ஆய்வு

நீலகிரி : தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சட்ட ஒழுங்கு விவகாரங்களில் பதட்டமானவையாக எனக் கண்டறியப்பட்டுள்ள 45 மாவட்டங்களில் அதிவிரைவுப்படை ஆய்வு செய்து மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பவுள்ளதாக அதிவிரைவுப்படை துணை கமாண்டென்ட் என்.பி.ரஜிதா தெரிவித்துள்ளார்.

நீலகிரி : தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சட்ட ஒழுங்கு விவகாரங்களில் பதட்டமானவையாக எனக் கண்டறியப்பட்டுள்ள 45 மாவட்டங்களில் அதிவிரைவுப்படை ஆய்வு செய்து மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பவுள்ளதாக அதிவிரைவுப்படை துணை கமாண்டென்ட் என்.பி.ரஜிதா தெரிவித்துள்ளார்.



நீலகிரி மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களை கடந்த ஒரு வாரகாலமாக ஆய்வு செய்த அதிவிரைவுப்படையினர் இன்று தங்களது ஆய்வினை முடித்து விட்டு கோவை திரும்பினர். இந்த ஆய்வு குறித்து அதிவிரைவுப்படை துணை கமாண்டென்ட் என்.பி. ரஜிதா செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சட்ட ஒழுங்கு விவகாரங்களில் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ள 45 மாவட்டங்களில் அதிவிரைவுப்படை ஆய்வு செய்து மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதிவிரைவுப்படை (ஆர்.எ.எப்) மத்திய சேமக் காவல் படையின் (சி.ஆர்.பி.எப்.) ஒரு அங்கமாகும். 105 ஆர்.எ.அப். முகாம் கோவை மகாலிங்கபுரத்தில் உள்ளது. மேலும், மக்களிடையே அச்சத்தை போக்கவும், சட்ட விரோதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் கூடலூர், உதகை, குன்னூர், தேவாலா மற்றும் உதகை ஊரக பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களை ஆய்வு செய்தோம். 



இங்குள்ள இளைஞர் சங்கங்கள், அமைதிக் குழுக்கள் மற்றும் பொதுமக்களிடம் சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடியதோடு, காவல்துறை கண்காணிப்பாளர் தெ. ஷண்முகப்பிரியாவையும் சந்தித்து அண்மையில் மாவட்டத்தில் ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதா..? என விவாதித்தோம். அதிவிரைவு படையினர் பதட்டமான மாவட்டங்களில் மாதம் இருமுறை முகாமிட்டு, கள நிலவரங்களை ஆய்வு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை வழங்க உள்ளது, என அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...