நீலகிரி : கூடலூர் அருகே சாலையில் ஆக்ரோஷத்துடன் உலா வந்த காட்டு யானையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

கூடலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை வனப்பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக, யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் குட்டியுடன் கூடிய யானைகள் உலா வருவதால், இங்கு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிய தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று நெலாக்கோட்டை முக்கிய சாலையில் ஆண் யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் நடந்து சென்று அருகில் இருந்த வனத்திற்குள் புகுந்தது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அச்சமடைந்தனர். மேலும், அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு இந்த ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.