அடிப்படை வசதிகள் இல்லாததால் கோத்தகிரி அருகே ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

நீலகிரி : குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அமைக்கவிருந்த கோத்தகிரி அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீலகிரி : குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அமைக்கவிருந்த கோத்தகிரி அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெட்டட்டி, சேலவை, தும்பூர் ஆகிய ஊர்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன .இங்கு நீண்டகாலமாக ஆரம்ப சுகாதார நிலையும் உள்ளது. இதனை ஒட்டி பாறைகள் உள்ளன. அங்கு வேறு புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இங்கு குடிநீர் வசதியோ, முறையான கழிவுநீர் வசதியோ இல்லை. எனவே, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், சுகாதார நிலையம் அமைத்தால் தங்கள் கோயில்களில் பண்டிகை மற்றும் சாவுகளில் காரியங்கள் செய்ய இடையூறாக இருக்கும் எனவும், மருத்துவ கழிவுகள் செல்ல சரியான கழிவுநீர் பாதை இல்லாததால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். 



இதனிடையே, ஊர் தலைவர் சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு கலந்துகொண்டு மாற்று இடம் பற்றி பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், அரவேணு பகுதியில் உள்ள தனியார் இடத்தினை தனது சொந்த செலவில் பெற்றுத் தருவதாகக் கூறியதை அடுத்து போராட்டங்கள் நடத்த இருந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...