சென்னை : அ.ம.மு.க.வில் இருந்து விலகி தங்க.தமிழ்ச்செல்வன் கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
சென்னை : அ.ம.மு.க.வில் இருந்து விலகி தங்க.தமிழ்ச்செல்வன் கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க.) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் தங்கதமிழ்செல்வன். அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும், தேனி மாவட்ட செயலாளராகவும் இருந்தார். தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதனால், தங்கதமிழ்செல்வனுக்கு டி.டி.வி.தினகரன் மீதும், அ.ம.மு.க. மீதும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் அவர் இணைய உள்ளதாகவும், இதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த மூத்த அமைச்சர்களை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியது. ஆனாலும் அவர் இந்த தகவல்களை தொடர்ந்து மறுத்து வந்தார்.

இந்த நிலையில், சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் அ.ம.மு.க.வில் இருந்து விலகி தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஏற்கனவே, அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணங்க செந்தில்பாலாஜி, கலைராஜனை தொடர்ந்து, அ.ம.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.