கோவை : கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவையில் கடந்த 13-ம் தேதி போத்தனூர் பகுதியை சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான்,ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், கோவையில் பல்வேறு இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் கூறி இவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை மாநகர காவல் துறையினர் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்காக முகமது உசேன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரும் இன்று நீதிமன்றத்திற்காக அழைத்து வரப்பட்டனர். அப்போது, முகமது உசேன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் அனுமதி அளித்தார்.