ஆனைகட்டி சாலை விபத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலரின் மனைவி உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையின் மீது சந்தேகம் : கோவையில் கொளத்தூர் மணி புகார்

கோவை : கோவையில் நடந்த சாலை விபத்தில் மருத்துவர் ரமேஷின் மனைவி உயிரிழந்த விவகாரத்தில், விபத்து ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாகக் காவல் துறை செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவையில் நடந்த சாலை விபத்தில் மருத்துவர் ரமேஷின் மனைவி உயிரிழந்த விவகாரத்தில், விபத்து ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாகக் காவல் துறை செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகேயுள்ள ஜம்புகண்டிபுதூர் பகுதியில் கடந்த 24-ம் தேதி மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மோதிய விபத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனா உயிரிழந்தார். மனைவியின் உடலோடு மருத்துவர் ரமேஷ் பழங்குடியின மக்களோடு இணைந்து போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்த பகுதியில் இயங்கி வந்த மதுபானக்கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 



இந்த நிலையில், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், விபத்து ஏற்படுத்திய குற்றவாளிகள் மதுபோதையில் இருந்தனர் என்பதை உறுதி செய்வதற்கான மருத்துவ சோதனை நடத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர். மேலும், குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள், எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதை காவல்துறை கண்காணிக்கவில்லை எனவும், குற்றவாளிகளுக்கு சாதகமாக காவல்துறை செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கொளத்தூர் மணி குற்றம்சாட்டினர். 



பின்னர், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு கொடுத்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த கொளத்தூர் மணி கூறுகையில், "தனது மனைவி உயிரிழந்தும் மருத்துவர் ரமேஷ் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் மனைவியின் உடலை வைத்து போராட்டம் நடத்தினார். ஆனால், விபத்து ஏற்படுத்தியவர்கள் குறித்து தற்போது எங்களுக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன. விபத்து ஏற்படுத்தியவர்கள் எங்கு இருக்கிறார்கள் யார் என்பது கூட தெரியவில்லை. அவர்கள் குறித்த தகவல்கள் ஏதும் ஏன் வெளியில் வரவில்லை," என கேள்வி எழுப்பினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...