திருப்பூர் : திருப்பூர் அருகே வீட்டின் எதிர்ப்பால் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்ற காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் குருநாதன் (26). இவர் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து, பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்தும் வந்துள்ளார். மாணவியும் அவரைக் காதலித்துள்ளார். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் குருநாதனிடம் பேசுவதை அந்த மாணவி தவிர்த்துள்ளார். இந்த நிலையில், மாணவிக்கு வேறு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த குருநாதன், கடந்த 2015 செப்டம்பர் 14-ம் தேதி மாலை திருப்பூர் காங்கயம் சாலையில் மாணவியை வீட்டருகே வைத்து மறித்து, பீர் பாட்டிலை உடைத்து மாணவியின் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்திக் கொலை செய்ய முயன்றார். மேலும், அவரும் பாட்டிலால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குருநாதனைக் கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி ஜெயந்தி தனது தீர்ப்பில், குற்றம் சுமத்தப்பட்ட குருநாதனுக்கு கொலை அஎய்ய முயன்ற பிரிவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டல் பிரிவுக்கு 7 ஆண்டுகள் சிறையும், தற்கொலைக்கு முயன்றதற்கு ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.