திருப்பூர் : பிரதமர் மோடி தமிழகத்தை புறக்கணிப்பது போன்ற மாயையை தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் உருவாக்க முயற்சி செய்வதாக திருப்பூரில் நடந்த பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

வருகின்ற ஜூலை 6-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெறவிருக்கும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேசியதாவது :- தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வியடைந்ததால் மோடி தமிழகத்தை புறக்கணிப்பார் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சியினர் அரசியல் சாயம் பூசப் பார்க்கிறார்கள். அது தவறு, இந்த நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காகவும் மோடி கவனம் செலுத்தி வருகிறார்.

தேசிய அளவில் புதிதாக கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், மக்கள் அவர்களாகவே ஏற்காத வரை மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படாது. அதே சமயம், ஆக்கப்பூர்வமாகவும் இக்கல்விக் கொள்கை குறித்து அனைத்துக் கட்சிகளும் கருத்து தெரிவிக்க வேண்டும். குடிநீருக்காக நாள் கணக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. நீர் மேலாண்மை என்பது அரசாங்கத்தின் திட்டமாக மட்டும் பார்க்காமல் பொதுமக்களே முயற்சி செய்து நீர்நிலைகள் மற்றும் நீர் வழிப்பாதைகளை பாதுகாத்தால் தான் இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும். நீர் மேலாண்மை குறித்து பள்ளிப் பருவத்திலேயே பாடத்திட்டமாக கொண்டு வர வேண்டும், என கூறினார்.