கோவை : மேட்டுப்பாளையத்தில் பாக்கு தோப்பில் மலைப்பாம்பை விழுங்கிய 10 அடி நீள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. குறிப்பாக, அண்மை காலமாக இந்தியாவின் அரிய வகை பாம்பு இனத்தை சேர்ந்த கிங்கோப்ரா எனப்படும் ராஜநாக பாம்புகள் மேட்டுப்பாளையம் வனத்தில் அதிகமாக காணப்படுகிறது. குளிர் மற்றும் நீர்நிலைகள் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே காணப்படும் இவ்வகை பாம்பு இனங்கள், மேட்டுப்பாளையத்தின் மலை அடிவார பகுதியாக இருக்கும் கல்லார் பகுதியில் விவசாய நிலங்களில் புகுவது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. குளுமையான சூழல் நிலவுவதால் இங்குள்ள நீரோடைகளுக்கு காடுகளை விட்டு உணவை தேடி இந்த ராஜநாக பாம்புகள் வரத் துவங்கியுள்ளன.

இந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கல்லாறு பாக்கு தோப்பு வாய்க்கால் பகுதியில் மோகன்குமார் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோப்பில் நுழைந்து மலைப்பாம்பை விழு்ங்கி கொண்டிருந்தது. இதனைக் கண்ட தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் செல்வராஜ் மற்றும் வன உரிமை இயற்கை பாதுகாப்பு அமைப்பினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வாய்க்காலில் இருந்த 10 அடி நீளமுள்ள ராஜநாகத்தை சுமார் அரைமணி போராட்டத்திற்குப் பின் பிடித்தனர்.
இதையடுத்து, மீட்கப்பட்ட ராஜநாகம் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்த வனத்துறையினர், மீட்கப்பட்ட ராஜநாகம் மற்றும் மலைப்பாம்பினை கல்லார் காப்புக்காட்டில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் விடபட்டது.